பாலியல் பெண் பொம்மையை திருமணம் செய்த இளைஞர்

கஜகஸ்தானில் இளைஞர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த உடற்கட்டு கலைஞர் யூரி டோலோச்ச சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், பெண் வடிவிலான பொம்மை ஒன்றை யூரி திருமணம் செய்துகொண்டுள்ளார். மார்கோ எனப் பெயரிடிடப்பட்ட அந்த பொம்மையை 18 மாதங்களாக காதலித்து வந்த யூரி தனது திருமண வாழ்வை தற்பொது துவங்கியுள்ளார்.

அவரது திருமண நிகழ்ச்சிக்கு யூரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். மார்கோவிற்கு உள்ளே ஒரு மென்மையான ஆன்மா இருப்பதாக அவர் கூறியுள்ளார்.