பையினுள் கல்லை கட்டி நாயினை ஆற்றில் வீசிய பெண் ; கொடூர சம்பவம்

கொடூரமான பெண்  தான் வளர்த்த செல்லப்பிராணியான நாயினை பெரிய கல்லினால் கட்டி, ஆற்றினுள் எறிந்ததை அடுத்து அவ்வழியில் சென்ற வழிப்போக்கன் ஒரு நதியிலிருந்து குறித்த நாயினை மீட்டுள்ளார்.

சார்லின் லாதம் என்ற 31 வயதுடைய பெண்னே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டதுடன்
பாதுகாக்கப்பட்ட விலங்குக்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

இந்த ஆண்டு ஜனவரியில் ட்ரெண்ட் நதியில் இருந்து பெல்லா என்ற நாய் மீட்கப்பட்டது.

பெல்ஜிய ஷெப்பர்ட்  என்ற இனத்தினை சேர்ந்த நாயினை ஜேன் ஹார்ப்பரால் தான் காப்பாற்றியுள்ளார்.

ஃபார்ண்டனில் நாட்ஸின் என்ற இடத்தில் அமைந்துள்ள நதியில் காலை 8.45 மணியளவில் குறித்த நாய் ஒரு பெரிய கல் அடங்கிய ஒரு பையுடன் ஆற்றில் உயிருக்கு போராடியவாறு இருந்துள்ளது.

நோட்ஸ், நெவார்க்கைச் சேர்ந்த ஹார்பரின் மனைவியும் விரைந்து வந்து ஆற்றில் இருந்து குறித்த நாயினை வெளியே இழுக்க உதவி செய்துள்ளார்.

பொலிஸார் பெல்லாவை ஒரு உள்ளூர் கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் குறித்த நாயானது “மிகவும் மோசமாக” இருந்துள்ளதாகவும் பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த நாயானது மிருக நல பாதுகாப்பு அமைப்பின் பராமரிப்பில் உள்ளதாகவும் இப்பொழுது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்புபட்ட  சார்லின் லாதம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.