சவுதி-ஹவுத்தி இடையே முற்றும் மோதல்! தாக்குதலுக்கு சுரங்கங்களை அழித்து அரபு கூட்டுப்படை பதிலடி

தெற்கு செங்கடலில் ஈரானிய ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகளால் நடத்தப்பட்ட ஐந்து கடற்படை சுரங்கங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

கடற்படை சுரங்கங்கள் ஈரானால் தயாரிக்கப்பட்டவை. செங்கடலில் மொத்தம் 163 சுரங்கங்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளன.

ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுத்தி போராளிகளின் நடவடிக்கைகள் செங்கடலில் கடல் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன என்று அரபு கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதகாவும், இதில் பலர் காயமடைந்ததாக ஹவுத்தி இராணுவ செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை உறுதி செய்த அரவு கூட்டுப்படை, ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிலையத்தில் ஹவுத்திகளின் ஏவுகணைத் தாக்குதல் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மீதான தாக்குதல் என்று கூறினார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செங்கடலில் உள்ள ஹவுத்தி சுரங்கங்கள் மீது அரபு கூட்டுப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.