ஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது – ரஷியா அறிவிப்பு

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பலநாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ரஷியாவின் அரசின் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய மையம் ஸ்புட்னிக் வி என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியின் 2 கட்ட பரிசோதனைகளிளும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது 3-ம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையின் 2-வது இடைக்கால பரிசோதனை முடிவுகளை ரஷியா இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா பாதிக்கப்பட்ட 39 பேருக்கும், 18 ஆயிரத்து 794 நோயாளிகளுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதில் 28 நாட்கள் இடைவெளியில்
தடுப்பூசி 91.4 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது. அதேவேளை 48 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியின் செயல்திறன் 95 சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடுப்பூசியின் விலை 10 டாலர்களுக்கு குறைவாக இருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 750 ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு இரண்டு டோஸ்கள் இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.