ரஷ்யாவில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்ஷங்கருடன் சீன மந்திரி வாங் யி சந்திப்பு

‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்ஷங்கரும், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியும் சந்தித்துப் பேசினர்.

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.