ஜோ பைடன் பதவி ஏற்க ஏற்பாடுகள் தொடங்கின

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஜனவரி மாதம் 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்றுக் கொள்வார்.

அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். தற்போதைய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஏற்றுக்கொண்டதும் ஜோ பைடன் வெற்றியை முறைப்படி அறிவிப்பார்கள்.

ஜனவரி மாதம் பதவி ஏற்பு விழா நடக்க இருந்தாலும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. சட்டரீதியாக சில நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

ஜோபைடன் பதவி ஏற்பதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த பணிகளும் தொடங்கப்பட்டு இருக்கின்றன. ஜோ பைடனுக்கு ஏற்ற வகையில் மாளிகை அறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்.

அடுத்ததாக பதவி ஏற்பு விழாவுக்கு யார்- யாரை அழைப்பது? எந்த மாதிரி விழாவை நடத்துவது? என்பது குறித்து அலுவல் ரீதியாக திட்டங்களை வகுத்து வருகிறார்கள். ஜோ பைடன் வெற்றியை முறைப்படி அறிவித்ததும் அவரோடு கலந்து ஆலோசித்துவிட்டு மேற்கொண்டு மற்ற பணிகளை செய்வார்கள்.

x