அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும், அமெரிக்காவில் மொத்தமாக உள்ள 50 மாநிலங்களில் இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள 44 மாநிலங்களின் முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் இதுவரையில் 253 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 213 ஆசனங்களை கைப்பற்றியுள்ளார்.
ஆறு மாநிலங்களின் முடிவுகள் இதுவரையில் வெளியாகாமல் உள்ளன.
தேர்தல்மன்றக் கல்லூரியில் 20 ஆசனங்களைக் கொண்ட பென்சில்வேனியா, 15 ஆசனங்களைக் கொண்ட வடக்கு கரோலினா, 15 ஆசனங்களைக் கொண்ட ஜோர்ஜியா, 11 ஆசனங்களைக் கொண்ட அரிசோனா, 6 ஆசனங்களைக் கொண்ட நிவாடா, 3 ஆசனங்களைக் கொண்ட அலஸ்கா முதலான மாநிலங்களின் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

x