நைஜீரியாவில் சந்தைக்குள் லாரி புகுந்து 16 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

ஒண்டோ மாகாணத்தில் அகுங்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று உள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் இந்த சந்தையில் குவிந்திருந்தனர். அப்போது சந்தை அமைந்துள்ள சாலையில் அதி வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சந்தைக்குள் புகுந்தது. இதில் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதனால் அங்கும் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

இந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

x