பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை.. முதுகில் துளைத்திருந்த துருப்பிடித்த கத்தி: நடுங்க வைக்கும் சம்பவம்

அர்ஜென்டினா நாட்டில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று கத்திக்குத்து காயங்களுடன் தெருவில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு அர்ஜென்டினா மாகாணம் மிஷனஸ் பகுதியிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

குழந்தையை மீட்ட நபர் உடனடியாக அருகாமையில் அமைந்துள்ள காவல் நிலையத்தை நாடவும், அவர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் குழந்தையை சேர்ப்பித்துள்ளனர்.

அவசர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த குறித்த குழந்தையை போசாடாஸ் நகரில் உள்ள கோஸ்டனேரா ஓஸ்டே அவென்யூவில் ஒரு வழிப்போக்கர் முதலில் கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.

அந்த நபரே பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். பச்சிளம் குழந்தையின் முதுகில் துருப்பிடித்த கத்தி ஒன்று துளைத்த நிலையில் இருந்தது என்றாலும், உயிர் அபாயம் இல்லை என்றே மருத்துவர்கள் பின்னர் தெரிவித்தனர்.

மட்டுமின்றி பிறந்து 2 நாட்கள் மட்டுமேயான அந்த குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.

இதனிடையே, துரிதமாக விசாரணையை முன்னெடுத்த பொலிசார், குழந்தையின் தாயாரை கைது செய்துள்ளனர்.

குழந்தை தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியதாகவும், உயிர் தப்பும் என்றே நம்புவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துருப்பிடித்த கத்தியால் குழந்தை தாக்கப்பட்டிருந்தாலும், உள் உறுப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குழந்தை உயிர் தப்ப முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைதான அந்த கொடூர தாயார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.