அதிகரித்து வரும் ஒமிக்ரோன்!

ஓமிக்ரோன்  உயர் பரிமாற்ற திறன் கொண்ட விரைவில் பரவக்கூடிய கோவிட் வைரஸின் ஒரு வடிவம். இது  கோவிட் வைரஸின் இறுதி அலை என்றோ, உலகளாவிய ரீதியில் கோவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்றோ, கருதுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், முறையான கோவிட் பரிசோதனை மற்றும் விரிவான தடுப்பூசி போன்ற உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், உலகளாவிய ரீதியில் பாரிய அளவு வளர்ந்த கடுமையான தொற்றுநோயை இந்த ஆண்டிற்குள் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட ஒன்பது வாரங்களில் உலகம் முழுவதும் 80 மில்லியன் மக்களுக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது 2020 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.