விமான தாக்குதலில் 100 பேர் பலி!

யேமனின் தடுப்புநிலையமொன்றிற்கு மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் நூறு பேர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

சவுதி கிளர்ச்சியாளர்களினால் நேற்றைய தினம் (21 ஆம் திகதி ஜனவரி மாதம் 2022) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் அறிக்கையிடுகின்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த தடுப்பு நிலையமொன்றிற்கே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யேமனில் உருவாகியிருந்த கிளர்ச்சியாளர்களை தாக்கும் நோக்குடன் அராபிய நாடுகளின் கூட்டணியால் 2015 ஆம் வருடம் முதல் தாக்குதல்கள் நடைப்பெற்று வருவதாக வெளிநாட்டு  ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களினால் இதுவரை சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 10,000 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.