சிறை வாசம் அனுபவித்த சவுதி இளவரசி விடுதலை

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத். ‘அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும்’ என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கடந்த 2019 மார்ச்சில் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து செல்வதற்காக விமான நிலையத்துக்கு தன் மகளுடன் பாஸ்மா சென்றார். அப்போது சவுதி அரசு அவரை கைது செய்தது. ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் விதிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

சிறையில் இருந்த பாஸ்மா தன் உடல் நலனைக் கருத்தில் வைத்து தன்னை விடுவிக்கும்படி சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மூன்று ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்மா மற்றும் அவரது மகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.