வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியா தற்போதைய நிலை

மலேசியாவில் வெள்ளத்தால் 98 கூட்டரசு வீதிகளும், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரங்கானு, கிளந்தான், மலாக்கா, பகாங் , கெடா ஆகிய ஏழு மாநிலங்களிலுள்ள 126 வீதிகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாக தேசியப் பேரிடர் அமைப்பான NADMA தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் வெள்ளம், நிலச்சரிவு, பாலத்திலும் சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்களினால், நாட்டிலுள்ள 224 பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக NADMA வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில சாலைகள் அனைத்து வாகனங்களும் பயணிக்க முடியாமல் போக்குவரத்துக்கு முற்றாக மூடப்பட்டுள்ளன. சில சாலைகளில் கனரக வாகனங்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.