உஸ்பெகிஸ்தானில் கேன்டீனில் வெடிவிபத்து; 10 பேர் காயம்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் அக்தர்யா மாவட்டத்தில் சமர்கந்த் பகுதியில் கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், இன்று திடீரென எரிவாயு வைக்கப்பட்ட இரு சிலிண்டர்கள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால் பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் இருந்த 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த வெடிவிபத்திற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.