ஆப்கானிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரண்

தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகிவருகின்றனர். ஒருபக்கம் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தலீபான்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜலதாபாத் நகரத்தில் இன்று 100- க்கும் மேற்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள், அதிகரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக ஐ.எஸ் இயக்கம் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.