ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு டிசம்பர் 1-ஆம் திகதி முதல் அனுமதி…!

முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் தகுதியான விசா வைத்திருந்தால் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ம் திகதி முதல் ஆஸ்திரேலியா வரலாம் என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

டிசம்பர் 1-ம் திகதிமுதல், முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம். விலக்கு கோரி தனியாக விண்ணிப்பிக்கத் தேவையில்லை.

மாணவர்கள், தொழிலாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், விடுமுறைக்கு வரும் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் அனைவரும் தகுதியான விசா வைத்திருத்தல் போதுமானது.

ஆஸ்திரேலிய மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.