ஜெருசலேம் பாலஸ்தீனியர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இஸ்ரேலியர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்டகாலமாம மோதல் நிலவி வருகிறது. ஜெருசலேமை மையமாக கொண்டே இந்த மோதல் நடைபெற்று வருகிறது. ஜெருசலேமை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. கிழக்கு ஜெருசலேமின் பெரும் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள பழைய நகர் பாப் அல்-சில்சிலா பகுதியில் நேற்று துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நுழைந்த பாலஸ்தீனியர் அங்கு இருந்த இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் உயிரிழந்தார். மேலும், 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை சுட்டுவீழ்த்தினர். இதில், தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் தங்கள் அமைப்பை சேர்ந்தவர் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.