பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் மாஸ்டங் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின தலைவர் சர்டார்சடா மீர் முகமது கான். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி’யின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மீர் முகமது கான் தனது பாதுகாவளர்களுடன் மாஸ்டங் மாவட்டத்தில் இருந்து குவாடா நகருக்கு நேற்று காரில் சென்றுகொண்டிருந்தார்.

வாலிகான் நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர் மீர் முகமது கான் பயணித்த கார் உள்பட 2 கார்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மீர் முகமது கான் அவரது பாதுகாவளர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடி நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.