இந்தோனேசியாவில் நிலச்சரிவு 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜகர்த்தா மாகாணத்தில் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் மழை காலங்களில் இதுபோன்ற வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், இதே மாவட்டத்தில் நேற்றிரவு கனமழையை தொடர்ந்து, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில், பல்வேறு வீடுகள் நிலச்சரிவில் சிக்கின. சேறும், சகதியும் அவற்றை சூழ்ந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார் என பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.