பர்கினாபசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல் ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலி

பர்கினாபசோ நாட்டின் சவும் மாகாணத்தில் சாஹெல் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி மேக்சிம் கோன் வானொலியில் அறிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராணுவத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படியும், பகுதியினர் கண்காணிப்புடன் இருக்கும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.