மெக்சிகோவில் 2 ஆயுத தாக்குதல்கள் 11 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் நடந்த 2 ஆயுத தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் சம்பவம் சிலாவோ பகுதியில் நடந்துள்ளது. இதில், ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

இதேபோன்று, மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் கொல்லப்பட்டனர்.