இளைஞனின் ஆண் உறுப்பை கடித்த மலைப்பாம்பு ; என்ன நடந்தது தெரியுமா?

தாய்லாந்தை நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் கழிவறையில் உட்கார்ந்திருந்தபோது மலைப்பாம்பு அவரின் ஆண்குறியைக் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

18 வயதான சிராபாப் மசுகரத்(Siraphop Masukarat), நேற்று மாலை கழிவறைக்கு சென்ற போது, அவரது ஆண் குறியில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது.  அவன் கழிவறையில் கீழே பார்த்தபோது, மலைப்பாம்பு அவனது ஆண்குறியின் நுனியைச் கடித்து சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவன் ஆண் உறுப்பிலிந்து இரத்தம் வெளியேறிவதையும் கண்டு பதற்றமடைந்த சிராபாப்.

குறித்த சம்பவம் பாங்காக்கிலிருந்து வடக்கே 13 மைல் தொலைவில் உள்ள மத்திய தாய்லாந்தின் நொந்தபுரியில் இடம்பெற்றுள்ளது.

அவன் அணிந்திருந்த பேண்ட்டினை கணுக்கால்களைச் சுற்றி கொண்டு குளியலறையிலிருந்து வெளியே ஓடிய சிராஃபாப் பயங்கரமாக கத்தியுள்ளார்.

உடனடியா சிராபாப்பின் தாயார் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்று சிகிச்கை அளிக்க அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிராஃபாப் தெரிவித்ததாவது,

“நான் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், ஆனால் நான் உட்கார்ந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென்று என் ஆண்குறியில் வலி ஏற்பட்டது. நான் கீழே பார்த்தேன், கழிப்பறையில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது.

‘இது ஒரு சிறிய பாம்பு மட்டுமே ஆனால் அதன் கடி மிகவும் வலுவாக இருந்தது. எனது ஆண்குறி குணமடைய முடியும் என்று நம்புகிறேன். ” என தெரிவித்துள்ளார்.

குறித்த பாம்பு வன ஜுவராசிகளால் பிடிக்கப்பட்டு காட்டினுள் விடுவிப்பதற்கான வேலை செய்யப்பட்டுள்ளது.

சிராபாப்பின் தாய் சுதாபத், இந்த சம்பவம் குறித்து தான் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ‘பாம்பு என் வீட்டிற்குள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது கழிப்பறையுடன் இணைக்கப்பட்ட வடிகால் வழியாக இருந்திருக்கலாம்.

‘பாம்பு என் மகனை மிகவும் காயப்படுத்தியது எனக்குத் தெரியும், ஆனால் அது ஒரு விஷமற்ற மலைப்பாம்பு மட்டுமே என்று நான் நிம்மதியடைகிறேன். அது ஒரு நாகம் என்றால், அவர் இறந்துவிடுவார்.

‘அவர் கழிப்பறைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவர் பயப்படுவார். ஆனால் அவர் மருத்துவமனையில் நன்றாக குணமடைந்து வருகிறார், பாம்பைப் பிடித்த மீட்பு தொண்டர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ‘