நைஜீரியா: நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி மோதல் – 6 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மோசமான சாலைகள், அதிவேக பயணம் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் எனுகு நகரில் உள்ள ஒரு சந்தைபகுதியில் சில ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. அப்போது, அப்பகுதியில் தண்ணீரை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டேங்கர் லாரி சாலை அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சில ஆட்டோக்கள் நசுங்கின. மேலும், ஆட்டோக்கள் அமர்ந்திருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.