அமெரிக்காவில் வாகனம் மீது ரெயில் மோதல்; 3 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சால்ஸ்டன் பகுதியில் வாகனம் ஒன்றில் 4 பேர் சென்று கொண்டிருந்து உள்ளனர். அவர்கன் சென்ற வாகனம் ரெயில்வே கிராசிங்கில் கடந்து செல்லும்போது, ரெயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதலில் 3 பேர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். விபத்து நடந்தபோது ரெயிலில் 500 பயணிகள் வரை இருந்துள்ளனர். எனினும், இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.