ரோமில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோம் சென்ற பிரதமர் மோடி அந்நகரின் பிளாசா காந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கு திரண்டிருந்த ரோம் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகனின் நாளை போப் பிரான்சிஸ் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.