‘கேம் ஆஃப் திரோன்ஸ்’ நடிகருக்கு கொரோனா பாதிப்பு

உலக அளவில் புகழ்பெற்ற சினிமா தொடர்களில் ‘கேம் ஆஃப் திரோன்ஸ்’-வும் ஒன்று. இத்தொடரில் ஜேசன் மொமொவா  42 முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல், குவாமென், ஸ்வீட் கெல் உள்பட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் ஜேசன் மொமொவா ’குவாமென் அண்ட் தி லாஸ் ஆஃப் கிங்டம்’ படத்தின் படப்பிடிப்பிற்கா இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.