மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் உள்ள மஷீகு நகரின் மசகுஹா கிராமத்தில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு தளமான மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதியில் நேற்று காலை முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்குள் புகுந்த துப்பாக்கியேந்த நபர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
Related Posts
இந்த துப்பாக்கிச்சூட்டில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து செ