பெண்ணின் காதிற்குள் உயிரோடு இருந்த சிலந்தி..! அதிர்ச்சியடைந்த டாக்டர்..!

தெற்கு சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண், காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும் அசவுகரியம் ஏற்பட்டதாலும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர் அவரது காதிற்குள் உயிரோடு சிலந்தி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரது காதிற்குள் ஒரு கேமராவை வைத்து பார்த்த போது, அந்த சிலந்தி லென்ஸை நோக்கி வந்துள்ளது. மேலும், அதன் அளவு மிகவும் பெரியதாக இருந்ததாகவும் டாக்டர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் காதிற்குள் சிலந்தி ஏறக்குறைய ஒரு இரவு முழுவதும் இருந்துள்ளது. எலெக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி சிலந்தியை அவரது காதிலிருந்து டாக்டர் அகற்றியுள்ளார்.