வாடிக்கையாளர்களை கவரும் ஸ்குவிட் கேம் கபே

கடந்த மாதத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான வெப்சீரிஸ் ஸ்குவிட் கேம். பெரும் பணத்தை வெல்லும் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள ஒரு கபே ஸ்குவிட் கேம் சீரிஸின் மாடலை பயன்படுத்தி தங்களுடைய கபேயின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.

நியான் விளக்குகள் கொண்ட அறையில், அச்சுறுத்தும் முகமூடி அணிந்த பாதுகாவலர்கள், பொம்மை துப்பாக்கிகளைப் பிடித்து, அறைக்குள் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் கட்டளைகளின் ஒலியில் உறைந்து, விளையாட்டில் முழுமையாக மூழ்கி, ஸ்குவிட் கேம் சீரிஸை அனுபவிக்கும் வகையில் இந்த கபே அமைந்துள்ளது.

இந்த புதிய முயற்சியின் மூலம் கொரோனா பரவலுக்குப் பிறகு மீண்டும் வாடிக்கையாளர்கள் பலர் தேடி வருவதாக கபேயின் உரிமையாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.