ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கன்னியாஸ்திரி விடுவிப்பு

ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் வசிக்கும் கொலம்பியாவைச் சேர்ந்த 59 வயதான கன்னியாஸ்திரி குளோரியாவை, பிணைக்கைதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் திகதி பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இதனை தொடர்ந்து அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாலி அரசு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் பயங்கரவாதிகளிடம் இருந்து கன்னியாஸ்திரியை தற்போதைய மாலி அரசு மீட்டுள்ளது. இதையடுத்து கன்னியாஸ்திரி குளோரியா, மாலியின் இடைக்கால அதிபர் அசிமி கோய்ட்டாவை சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அசிமி கோய்ட்டா உறுதியளித்துள்ளார்.