8 மணி நேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் சேவை சீரானது

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சேவை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென முடங்கியது. இதனால் பயனாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இதற்கிடையே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது. விரைந்து இந்த சிக்கலை சரிசெய்வோம் என பேஸ்புக் தெரிவித்தது. சமூக வலைத்தள முடக்கத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியது.
இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை இன்று அதிகாலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியதால் சமூக வலைதள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.