ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

ஜப்பானின் பிரதமராக சுகா பொறுப்பு வகித்து வந்தார். கொரோனாவை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் பதவி விலகினார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை இன்று நடத்தியது. இதில் தாரோ கோனோ, புமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான புமியோ கிஷிடா வெற்றிபெற்றார். அவர் ஜப்பானின் புதிய பிரதமர் ஆகிறார்.