இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்

இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சன். இவரது தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர்.

2019-ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது தாயாரை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.