இத்தாலியில் கொவிட் 19 தொற்றின் இரண்டாம் அலை

ஐரோப்பிய வலய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் கொவிட் 19 தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதால் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நேற்றைய தினத்தில் மாத்திரம், இத்தாலியில் முதன் முறையாக 10 ஆயிரம் பேர் வரையில் கொவிட் 19 தொற்றுறுதியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரையில் இத்தாலியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 91 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் இத்தாலியில் இதுவரையில் 36 ஆயிரத்து 467 பேர் உயிரிழந்துள்ளனர்.