பாதுகாப்பு அனுமதிக்கும்வரை வீட்டில் இருக்கவும்: ஆப்கானிஸ்தான் பெண் அரசு ஊழியர்களுக்கு தலிபான் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் உரிமை பறிக்கப்படும், மனித உரிமை மீறல் ஏற்படும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

ஆனால், முந்தைய தலிபான் அரசுபோல் இருக்காது. இஸ்லாமியத்திற்கு உட்பட்டு பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்படும் என தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதை நம்ப மறுத்து வருகிறது.

அவர் அறிவித்த நிலையில் டி.வி. நிலையத்தில் வேலைப்பார்த்த பெண், பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அரசு அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பெண்கள் பாதுகாப்பு அனுமதிக்கும்வரை வீட்டில் இருக்கவும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.