ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்டு புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.

அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டுவிட்டு சொந்த நாடு திரும்பி கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று விமானத்தை கடத்தியது.

விமானம் தற்போது ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும், இதில் தலிபான்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.