கர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு அனுமதி- பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள புகழ்பெற்ற சீக்கிய குருத்வாராவுக்கு இந்திய சீக்கியர்கள் சென்று வர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிகரித்ததால் கடந்த மே 22-ந் திகதி முதல் இந்தியர்களை பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் நினைவு தினம் அடுத்த மாதம் செப்டம்பர் 22-ந் திகதி அனுசரிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் முதல் இந்தியர்கள் கர்தார்பூர் செல்ல அனுமதிப்பது என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் 2 டோஸ் தடுப்பூசியும் போட்ட இந்திய பக்தர்கள் பாகிஸ்தான் செல்லலாம்.