நியுசிலாந்தில் ஒரேயொருவருக்கு கொரோனா உறுதி – முழு நாட்டையும் லொக்டவுன் செய்த பிரதமர்

நியூஸிலாந்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முழு நாட்டிலும் முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்லாந்து நகரில் கொரோனா தொற்றுடைய ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாத காலத்தில் நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தொற்று இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூஸிலாந்து முழுவதும் லொக்டவுணை பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

ஆக்லாந்தில் ஒரு வார காலத்துக்கும் நியூஸிலாந்தின் ஏனைய பகுதிகளில் 3 நாட்களுக்கும் லொக்டவுண் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.