ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்திவிட்டு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ராணுவம் முதல் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால், என்ன ஆகுமோ? என மக்கள் அச்சப்பட்டுள்ளனர்.
காபூலில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தில் செல்வதற்கு மக்கள் அலைமோதினர். அதில் சிலர் விமானத்தின் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர். அப்போது கீழே விழுந்து மூன்று பேர் பலியானார்கள்.
கவிழ்க்கப்பட்ட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சுதந்திரம் தற்போது பறிபோகுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது.
Related Posts
நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. எந்த அமைப்பு, ராணுவ அமைப்பிலும் கிடையாது. ஆப்கானிஸ்தானை கட்டமைக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.