தலிபான்கள் அறிவிப்பு ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.

‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய அரசு பதவி ஏற்றதும் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

கோப்புபடம்

ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. அந்த கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். எனவே மற்ற நாடுகளை போல பல தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.