துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்கள் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Related Posts