இந்துகுஷ் பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் இன்று மதியம் 3.40 மணிக்கு நிலக்கடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளிவில் 5.2 ஆக பதிவானதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்துகுஷ் மலையில் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் ஆப்கானிஸ்தான் காபுல், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. கடந்த மாத்ம வடக்கு- வடகிழக்கு காபுல் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.