பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த வெடிகுண்டு வெடித்து 2 போலீசார் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஜர்கூன் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இதனருகே போலீசாரின் வேன் ஒன்று நின்றுள்ளது.

அந்த வெடிகுண்டுகள் திடீரென நேற்று மாலை வெடித்துள்ளன. இந்த சம்பவத்தில் 2 போலீசார் பரிதாபமாக பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது பயங்கரவாத செயலா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.