மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.