உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்தினால் உயர்வு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் வார இறுதியில் சிறியளவான வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கடந்த வார நாட்களில் 2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை தற்போது 75 அமெரிக்க டொலரின் விளிம்பில் உள்ளது.

நிரம்பலுக்கு அதிகமான கேள்வி, தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்பவற்றினால் இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.