இங்கிலாந்தை விடாத கொரோனா – 58 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதேபோல், 85 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உள்ளது. மேலும் 11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.