இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தில்  8,070 அடியுள்ள சினாபுங் எரிமலை உள்ளது. அந்த எரிமலை புதன் கிழமையன்று வெடித்து அதல் இருந்து சாம்பல் வெளியாகிறது. இதனால் அந்த பகுதியில் முழுவதும்  சாம்பலாக காட்சியளித்தது.
சுமார் ஆயிரம் மீட்டர்களுக்கு அப்பகுதியில் வானம் அடர் புகை மற்றும் சாம்பலுடன் தோற்றமளிக்கிறது. காற்றில் ஏறக்குறைய நான்காயிரத்து ஐந்நூறு மீட்டர் பரப்பில் எரிமலை சாம்பல் மற்றும் புகை கலந்திருந்தாக வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் பாதிப்புகள் பெரியளவில் இல்லாததால் விமானங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. எரிமலையில் இருந்து எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளியேறலாம் என்பதால், அப்பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எரிமலை வெடிப்பால் உயிர்பலி ஏற்படவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் 16 பேர் உயிழந்தது குறிப்பிடத்தக்கது.
17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 130 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.