நான் பிரசவ விடுப்பிலிருக்கிறேன்… ஆனால் எனக்கு குழந்தையில்லை: இறுதிச்சடங்குக்காக தயாராகும் ஒரு பெண்ணின் கண்ணீர்க்கதை

பிரித்தானிய பெண் ஒருவர் பிரசவ விடுப்பில் இருக்கிறார்… ஆனால் அவருக்கு குழந்தையில்லை! பிரித்தானியாவின் Readingஇல் வாழும் Louisa Harris (35)ம் அவரது கணவர் Liam Weekes (33)ம் தங்கள் குழந்தையை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற Louisaவுக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவரது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்க, அதிர்ச்சியும்குழப்பமும் ஏற்பட்டுள்ளது அவருக்கு.

கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக, தங்கள் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு, திடீரென உங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினால் எப்படி இருக்கும்? ஒன்றும் புரியாமல் தவித்த ஜோடி, இறந்த குழந்தைக்காக அழுதுகொண்டிருக்க, மருத்துவர்கள் குழந்தைக்கு உடற்கூறு ஆய்வு செய்து அது இறந்ததற்கான காரணத்தைக் கூற, மேலும் கோபம் அதிகமாயிற்று Louisaவுக்கு! சில பெண்களின் பிறப்புறுப்பில் Group B streptococcus (GBS) என்னும் ஒருவகை பாக்டீயா இருக்கும்.

இவ்வகை பாக்டீரியா, அந்த பெண்ணை பொதுவாக பாதிப்பதில்லை. ஆனால், சில சமயங்களில் அந்த பாக்டீரியா கருப்பைக்குள் சென்றோ அல்லது குழந்தை பிறகும்போதோ குழந்தையை பாதித்துவிடும். ஆனால், எளிய ஒரு சோதனை மூலம் இந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். Louisa விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

நான் இப்போது பிரசவ விடுப்பில் இருக்கிறேன், ஆனால் எனக்கு குழந்தை இல்லை என்று கண்ணீர் விடும் Louisa, தன் குழந்தையின் இறுதிச்சடங்கிற்காக தான் தயாராகிவருவதாக தெரிவிக்கிறார்.

அவருடைய கேள்வி ஒன்றுதான், எளிய சோதனை மூலம் அந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றால், அதை செய்திருக்கலாமே, நான் அதற்காக பணம் செலவு செய்ய யோசித்திருக்கமாட்டேனா என்று கதறுகிறார் Louisa.

பல நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு இந்த சோதனை வழக்கமாக செய்யப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் அந்த வழக்கம் இல்லை.

தனது துயரம் மற்றும் இழப்பின் மத்தியிலும், எல்லா கர்ப்பிணிகளுக்கும் அந்த சோதனையை கட்டாயமாக்கவேண்டும் என பிரச்சாரம் செய்துவருகிறார் Louisa.