உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் மற்றும் பல நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் எதிர்ப்பையும் மீறி சீனா ஒரு வெற்றியைப் பெற முடிந்தது.
2016 ல் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ரஷியா, இந்த முறை 158 வாக்குகளைப் பெற்று மீண்டும் வந்தது.
சவூதி அரேபியா மனித உரிமை மீறல்களுக்காக விமர்சிக்கப்பட்டாலும், அதன் தோல்வி ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் இது கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 2016 ல் 152 வாக்குகளைப் பெற்று இருந்தது.
ஜெர்மனி தலைமையிலான 39 நாடுகளின் குழு கடந்த வாரம் ஐ.நாவில் சீனாவை கடுமையாக விமர்சித்தது, சின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை மற்றும் ஹாங்காங்கில் சமீபத்திய பிரச்சினைகள் குறித்து அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சீனா, ரஷியா மற்றும் கியூபா போன்ற சர்வாதிகார ஆட்சிகள் நடைபெறும் நாடுகளை தேர்ந்தெடுத்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பாம்பியோ விமர்சனம் செய்து உள்ளார்.
மேலும், ஐநா பாதுகாப்பு சபையில் இருந்து விலகுவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவு சரிதான் என இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.