இந்தியா – ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையிலான வலிமையான ஒத்துழைப்பு, கொரோனா உருவாக்கிய சவால்களை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. இது, தகவல் கட்டமைப்பு, 5ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தம் ஆகும்.